கிளிநொச்சியில் தொடருந்து மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு

tamilni 311

கிளிநொச்சியில் தொடருந்து மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு

கிளிநொச்சியில் தொடருந்து மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் நேற்று (18.1.2024) மாலை கிளிநொச்சி – அறிவியல்நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் முறிகண்டி பகுதியை சேர்ந்த 43 வயதான இரு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

அநுராதபுரத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த யாழ். ராணி தொடருந்தில் அவர் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version