பிள்ளையானுடன் இரகசிய சந்திப்பை மேற்கொண்ட பௌத்த பிக்கு

tamilni 91

பிள்ளையானுடன் இரகசிய சந்திப்பை மேற்கொண்ட பௌத்த பிக்கு

நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், பாதுகாப்பு உயர்அதிகாரி ஒருவர் மற்றும் இனவாத பௌத்த பிக்கு ஒருவருக்கு இடையில் இரகசிய சந்திப்பொன்று நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. .இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத்தாக்குதலின் பின்னணியுடன் பிள்ளையானுக்கு தொடர்பு உண்டு என செனல்4 ஊடகம் தகவல் வெளியிட்டிருந்தது.

குறித்த தாக்குதலுடன் தொடர்புபட்டதாக கூறப்பட்ட பாதுகாப்பு உயர் அதிகாரி, பிள்ளையான் மற்றும் இனவாத கருத்துக்களை வெளியிடும் பௌத்த பிக்கு ஆகியோருக்கு இடையில் இரகசிய சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு பற்றி புலனாய்வு செய்தி அறிக்கையிடும் வலையொளி தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, குற்ற விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதானி ஷானி அபேசேகரவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் சட்ட மா அதிபர் திணைக்களம் உச்ச நீதிமன்றின் எதிரில் உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version