அரச மருந்தாளுனர் சங்கம் குற்றச்சாட்டு

tamilni 49

அரச மருந்தாளுனர் சங்கம் குற்றச்சாட்டு

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையகத்தின், பல முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக அரசு மருந்தாளுனர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த ஆவணங்களை அழிப்பதில் ஆணையகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி, விஜித் குணசேகரவின் பங்கு இருப்பதாக, அதன் தலைவர் துஷார ரணதேவ, குற்றம் சுமத்தியுள்ளார்.

முதலாம் திகதி இரவு, தலைமை நிர்வாக அதிகாரி, ஆணையக வளாகத்திற்குச் சென்று காகித கட்டர் மூலம் சில கோப்புகளை அகற்றியதாகவும் இந்த கோப்புகள் பைகளில் வைக்கப்பட்டுள்ளதாகவும் துஷார ரணதேவ கூறியுள்ளார்.

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையகத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய பிரதம நிறைவேற்று அதிகாரியுமான வைத்தியர் விஜித் குணசேகர, அண்மைக் காலமாக தரம் குறைந்த மருந்துகளின் வருகை தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version