2 17
இலங்கைசெய்திகள்

கல்லூண்டாயில் அதிகளவில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்!

Share

யாழ்ப்பாணம் மாநகர சபையினால் கல்லூண்டாயில் ஏராளமான மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகின்றமை உறுதியாகியுள்ளது.

கழிவுப் பொருட்கள் சேமிக்கப்படும் இடமான கல்லூண்டாய் பகுதியில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெறுகின்றன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம்(29) அந்தப் பகுதி மக்கள், மானிப்பாய் பிரதேச சபையின் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் இணைந்து மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்களை வழிமறித்தனர்.

இதனால் மாநகர சபையின் உறுப்பினர்கள், பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே முரண்பாடு ஏற்பட்டது.

பின்னர் குறித்த பகுதியை பார்வையிடுவதற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள், யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர்கள், கல்லூண்டாய் பகுதி சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளே சென்றனர்.

அங்கு மக்கள் குறிப்பிட்டது போன்று ஏராளமான மருத்துவ கழிவுகள் இருப்பது அவதானிக்கப்பட்டதுடன் குப்பைகள் தரம் பிரிக்கப்படாமல் ஒன்றாக கொட்டப்பட்டு இருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...