24 6642c9b794748
இலங்கைசெய்திகள்

ரணிலுக்கு கசப்பான துர்ப்பாக்கிய நிலை ஏற்படலாம்!

Share

ரணிலுக்கு கசப்பான துர்ப்பாக்கிய நிலை ஏற்படலாம்!

படுகொலையுண்ட தமது உறவுகளை நினைவேந்தும் நமது மக்களின் உரிமையை அடக்குமுறைச் சட்டங்களை ஏவி மறுப்பது நாட்டில் அமைதி, சமாதானத்துக்கான வாய்ப்பை அடியோடு குலைத்து விடும் என புளொட் அமைப்பின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் (Dharmalingam Sithadthan) தெரிவித்துள்ளார்.

இவ்விடயத்தை நிதானத்தோடும், நீதி – நியாயத்தோடும், தார்மீகத்தோடும் அணுகும்படி தனது பொலிஸ் கட்டமைப்புக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுக்கமாகப் பணிப்புரை கொடுத்து வழிநடத்த வேண்டும், அதில் அவர் தவறுவாரேயானால் முன்னரும் சில தடவைகள் தமிழர்களிடம் அரசியல் பாடம் படித்த கசப்பான அனுபவம் போன்ற ஒரு பட்டறிவை திரும்பவும் அவர் பெற வேண்டிய துர்ப்பாக்கியம் நேர்ந்தாலும் நேர்ந்து விடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகித்தவர்கள் சம்பூரில் ஈவிரக்கமற்ற முறையில் இரவு வேளையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் நினைவேந்தும் உரிமை மறுக்கப்படக் கூடாது என்பதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே பல தடவைகள் வலியுறுத்திக் கூறி வந்திருக்கின்றார். அப்படி இருக்க அவரது பொலிஸ் துறை அதற்கு முற்றிலும் மாறாகவே இப்போது நடக்கின்றது.

இதனை நோக்கும்போது நமக்கு ஒரு சந்தேகம் ஏற்படுகின்றது. ஒன்றில் – பொலிஸ் துறை ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் இல்லை, தமது கொள்கை – கோட்பாட்டை தமது பொலிஸ் துறை மூலம் செயற்படுத்தச் செய்யும் நிர்வாக அதிகார வலிமை அவரிடம் இல்லாமல் இருக்கலாம்.

அல்லது அவரும் இரட்டை வேடம் போட்டுத் தமிழரிடம் கூறுவது ஒன்று, தனது சிங்களவர்கள் மூலம் செய்விப்பது வேறு என்று இருக்கலாம். எது, எப்படியாயினும் இந்தப் போக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியலுக்கு நல்லதல்ல.

இத்தகைய அடக்குமுறைக்கு எதிராப் போராடிப் பழக்கப்பட்டவர்கள் நமது தமிழ் மக்கள். நாங்கள் அடங்கோம். நினைவேந்தல் உரிமைகளுக்காகவும் அடங்காமல் போராடுவோம் என்ற செய்தியை ஜனாதிபதிக்கு கூறி வைக்க விரும்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 7 7
செய்திகள்அரசியல்இலங்கை

நாடு தழுவிய ரீதியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்களும் இன்று (30) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்....

images 5 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கழிப்பறை குழிக்குள் விழுந்து 4 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு: ஆணமடுவவில் சோகம்!

புத்தளம் – ஆணமடுவ பகுதியில் வீட்டிற்கு அருகே நீர் நிறைந்திருந்த கழிப்பறை குழிக்குள் விழுந்து 4...

850202 6773866 fishermens
செய்திகள்இலங்கை

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் 3 பேர் கைது: மீன்பிடி படகும் பறிமுதல்!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மூவரை...

1766491507 traffic plan 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் 1,200 பொலிஸார் குவிப்பு! காலி முகத்திடலில் விசேட போக்குவரத்து மாற்றங்கள்.

எதிர்வரும் 2026 புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கொழும்பு மற்றும் காலி முகத்திடல் (Galle Face) பகுதிகளில்...