சஜித் தலைமையில் பாரிய ஆர்ப்பாட்டம்!

sajith 3

அரசுக்கு எதிராக பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தயாராகிவருகின்றது.

எதிர்வரும் 16 ஆம் திகதி குறித்த போராட்டத்தை சஜித் தலைமையில் கொழும்பில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகளின் பிரச்சினைக்கு உடன் தீர்வை வழங்குமாறும், அதிபர், ஆசிரியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துமே இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், தேசிய வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படுவதற்கும் கடும் எதிர்ப்பு வெளியிடப்படவுள்ளது.

#SriLankaNews

Exit mobile version