குருநாகல் பகுதியில் உள்ள கட்டிடமொன்றில் இன்று மதியம் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குருநாகல் – கொழும்பு வீதியில் வதுராகல பகுதியில் அமைந்துள்ள கட்டிடமொன்றிலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
பாரிய புகைமூட்டத்துடன் தீ எல்லா திசைகளிலும் பரவி வருவதால் குறித்த பாதையூடாக போக்குவரத்தினை மேற்கொள்ள முடியாத சிரமத்திற்கும் மக்கள் முகம்கொடுத்துள்ளனர்.
மேலும், தீயணைப்பு வாகனங்களின் உதவியோடு தீயை அணைக்கும் நடைவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.