வெடுக்குநாறியில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிகோரி வவுனியாவில் பாரிய ஆர்ப்பாட்டம்
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி கோரும் ஆர்ப்பாட்டமானது வுனியா – பழைய பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக தற்போது ஆரம்பமாகியுள்ளது.
தற்போது இந்த ஆர்பாட்ட பேரணியானது வுனியா – பழைய பேருந்து தரிப்பிடத்திலிருந்து தொல்பொருள் திணைக்களம் வரை நகரவுள்ளது.
இதன்படி ஆர்பாட்டக்களத்தில் பொலிஸாரும், அதிரடிப்படையினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி வேண்டியும், பொலிஸாரின் அராஜகத்தை கண்டித்தும் வவுனியாவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது.
குறித்த ஆர்பாட்டமானது வவுனியா – பழைய பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக யாழ்ப்பாணத்தில் இருந்து பாரிய வாகன பேரணியொன்று வவுனியாவை வந்தடைந்துள்ளது.
இதற்கமைய ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ள இடத்தில் பாதுகாப்பு படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
Comments are closed.