படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர். நடராஜா ரவிராஜின் 61 ஆவது ஜனன தினம் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.
அமரர். ரவிராஜின் உருவச் சிலை அமைந்துள்ள சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்னால் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
அன்னாரின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்க பட்டதோடு நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில், சசிகலா ரவிராஜ், சமூக செயற்பாட்டாளர் க.அருந்தவபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

