கட்டுநாயக்க விமான நிலையம்: 21 கிலோ குஷ் போதைப்பொருளுடன் தம்பதியினர் கைது! 

images 8 1

கட்டுநாயக்க பன்னாட்டு விமான நிலையத்தில் சுமார் 25 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ‘குஷ்’ (Kush) ரக போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இருவரும் திருமணமான தம்பதியினர் எனத் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களிடம் இருந்து சுமார் 21 கிலோ கிராம் ‘குஷ்’ ரக போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். போதைப்பொருள் கடத்தலில் ஈடுப்பட்ட இந்தப் பெரிய தொகையின் பின்னணி குறித்துக் கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version