உப்பை இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவை முடிவை செயற்படுத்துவதில் ஏற்பட்ட தாமதமே, நாடளாவிய ரீதியில் தற்போது ஏற்பட்டுள்ள உப்பு தட்டுப்பாட்டுக்கான காரணம் என்று, இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் நேற்று குற்றம் சாட்டியுள்ளது.
இந்த ஆண்டு மார்ச் 26 அன்று 30,000 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி செய்வதற்கான திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இருப்பினும், இன்றுவரை உப்பு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவில்லை. எனவே தற்போது நிலவும் பற்றாக்குறை, இறக்குமதி செய்யப்படும் உப்பு, இலங்கைக்கு வந்தவுடன் முடிவுக்கு வந்துவிடும் என்று இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இறக்குமதி உப்பு இந்த ஆண்டு ஏப்ரல் மாத இறுதிக்குள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும், அது நிகழவில்லை என்று கனக அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், நாட்டில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக உள்ளூர் உற்பத்தியில் ஏற்பட்ட சரிவும் இதற்கு மற்றொரு காரணம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், இறக்குமதி உப்பு இருப்புக்கள் எதிர்வரும் நாட்களில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.
இதற்கு மத்தியில் சந்தையில் தற்போது ஒரு கிலோ உப்பு 400க்கும் அதிகமான விலையில் விற்பனையாகிறது.
- breaking news sri lanka
- cricket sri lanka
- Manufacturers Blame Cabinet For Salt Shortage
- news from sri lanka
- news in sri lanka today
- news sri lanka
- sri lanka
- sri lanka cabinet
- sri lanka news
- sri lanka news live
- sri lanka news sinhala
- sri lanka news tamil
- sri lanka news today
- Sri lanka politics
- sri lanka tamil news today
- sri lanka trending