எதிரியே புகழும் ஒரு தலைவரை நம்மவர்களே கொச்சைப்படுத்துகின்றனர்

tamilni 72

எதிரியே புகழும் ஒரு தலைவரை நம்மவர்களே கொச்சைப்படுத்துகின்றனர்

விடுதலைப் புலிகளின் தலைவர் பற்றி பாதுகாப்பு செயலாளர் புகழ்ந்து பேசியுள்ளார், இவ்வாறு எதிரியே புகழும் ஒரு தலைவரை போலி காணொளிகளை வெளியிட்டு நம்மவர்களே கொச்சைப்படுத்துவதை நினைத்து நான் வருத்தமடைகிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வன்முறை கலாச்சாரமானது அரசாங்கத்திற்கு உள்ளேயும் அரசியல்வாதிகள், அரசாங்க நிர்வாகிகள் மற்றும் பொலிஸ் திணைக்களங்களுக்கு மத்தியிலும் பரவி இருக்கின்றது.

பொலிஸ் நிலையம் என்பது அதியுயர் பாதுகாப்பு தரக்கூடிய இடமாக காணப்படவேண்டும். ஆனால் அங்கேயே மரணங்கள், சித்திரவதைகள் இடம்பெறுவது அரசாங்கத்தின் இயலாமைத்தன்மையை வெளிக்காட்டுகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version