படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு : மற்றுமொருவர் மாயம்
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் ஏற்பட்ட சோகம்

Share

தமிழர் பகுதியில் ஏற்பட்ட சோகம்

மன்னார் கட்டுக்கரை குளத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (2) படகு ஒன்றில் மீன் பிடிக்கச் சென்ற 2 மீனவர்கள் காணாமல் போன நிலையில் ஒருவர் இன்றுகாலை சடலாமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட மீனவர் பரப்பாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான விசுவா (வயது-57) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் காணாமல் போன மற்றைய மீனவரான பரப்பாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த விசுவாசம் சந்திரகுமார் பர்னாந்து வயது (37) என்ற மீனவரை தேடி வருகின்றனர்.

குறித்த இரு மீனவர்களும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (2) மாலை படகு ஒன்றில் மீன் பிடிக்கச் சென்ற நிலையில் படகில் நீர் நிரம்பி நீரில் மூழ்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையிலே இன்று (03) காலை சக மீனவர்கள் காணாமல்போனோரை தேடிய போது ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மற்றைய மீனவரை தேடி வருகின்றனர்.

மீட்கப்பட்டவரின் சடலம் மன்னார் வைத்தியசாலைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் உயிலங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...