வலி தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் ஜிப்ரிக்கோ இளவாலை பொலிசாரினால் தாக்கப்பட்டமைக்கு எதிராக யாழ் மாநகர முதல்வர் தனது கண்டனத்தை பதிவுசெய்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜோன் ஜிப்ரிக்கோ அவர்கள் பொலிஸாரினால் கடுமையாக தாக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
எந்த ஒரு கடுமையான குற்றத்தை செய்த ஒருவருக்கு கூட தாக்குவதற்கான அதிகாரம் போலீசாருக்கு இல்லை. இதுவே இலங்கையின் சட்ட ஏற்பாடாக இருக்கின்றது .
ஆனால் பொதுமக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி ஒருவரை இவ்வாறு மூர்க்கத்தனமாக இளவாலை போலீசார் தாக்கியிருப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு செயல் மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய ஒரு செயல்.
இதற்கு எனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட அனைத்து போலீசார் மீதும் மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் .
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீதும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் .அத்தோடு இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட அனைத்து பொலிசாரும் உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
ஜிப்ரிக்கோ அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் தேவையான சட்ட உதவிகளை வழங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றார்.
#SrilankaNews
Leave a comment