இலங்கைசெய்திகள்

சாணக்கியன் கிழக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை

rtjy 245 scaled
Share

சாணக்கியன் கிழக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை

மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல்தரை பிரச்சினை தொடர்பில் கிழக்கு ஆளுநர் சரியான தீர்வை பெற்றுத்தர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கும் இடையிலான சந்திப்பின் போதே இக்கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

இந்த சந்திப்பானது திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து இரா.சாணக்கியன் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் 10 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.அவர்களுடைய பிரதானமான கோரிக்கை ஆளுநர் வரவேண்டும் என்பது இது தொடர்பாக ஆளுநருக்கு எடுத்துரைத்தோம்.

குறித்த காணி மகாவலி அதிகாரசபையின் கீழ் வருகின்ற காணிகளே தவிர கிழக்கு ஆளுநரின் அதிகாரத்தின் கீழ் வரும் காணிகள் அல்ல அந்த அடிப்படையிலே மாகாண ஆளுநரிடம் மட்டும் நாம் இதற்கான தீர்வை எதிர்பார்க்க முடியாது.

இதைப்பற்றி ஜனாதிபதியிடமும் கலந்துரையாடவுள்ளோம்.அதன் பின்னர் தான் மக்களுக்கு அது தொடர்பாக ஒரு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும்.

எனினும் பண்ணையாளர்களுக்கு சரியான ஒரு முடிவை சொல்ல வேண்டிய ஆளும்கட்சி அமைச்சர்கள் தங்களுடைய சுயநலனுக்காக இயங்கிக்கொண்டிருக்கின்றார்களே தவிர மக்களுடைய பிரச்சினையைப் பற்றி எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதையும் கவலையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.” என தெரிவித்துள்ளார்.

மேலும் இச்சந்திப்பில் மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல்தரை பிரச்சினை மட்டுமல்லாமல் திருகோணமலை மாவட்டத்தில் பௌத்த விகாரைகளுக்காக பிக்குகளால் அடாவடித்தனத்தின் மூலம் ஆக்கிரமிக்கப்படுகின்ற காணிகள், வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள், தொல்லியல் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பு, சட்டவிரோத மணல் அகழ்வு போன்ற மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.மாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இதன் போது திருகோணமலை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாவட்ட குழு தலைவர் எஸ்.குகதாசன் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...