வெட்டுக்காயங்களுடன் நபரொருவர் சடலமாக மீட்பு

rtjy 138

வெட்டுக்காயங்களுடன் நபரொருவர் சடலமாக மீட்பு

மொனராகலை, படல்கும்புர வீதியில் 11 ஆவது மைல்கல் அருகில் தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பழக்கடை ஒன்றிற்கு அருகிலிருந்து சடலமொன்றை மீட்டுள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவரின் கழுத்தில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டதுடன், படல்கும்புர பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (14) சடலம் மீட்கப்பட்டுள்ளது.

புஸ்ஸல்லாவை, படல்கும்புர பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12 ஆம் திகதிக்கும் நேற்றைய (04) தினத்திற்கும் இடையில் இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

படல்கும்புர பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version