15 6
இலங்கைசெய்திகள்

ஐ.எம்.எப் இன் கடனுதவி குறித்து அநுர அரசாங்கத்தை சாடிய மனுஷ

Share

ஐ.எம்.எப் இன் கடனுதவி குறித்து அநுர அரசாங்கத்தை சாடிய மனுஷ

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்திருந்தால் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) மூன்றாவது கடனுதவி தற்போது கிடைத்திருக்கும் என முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.

காலியில் நேற்று (11) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வரவு செலவுத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாலும், பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் எடுத்த தீர்மானத்தினாலும் சர்வதேச நாணய நிதியத்தின் தவணை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போதைய அரசாங்கம் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்த முயற்சிக்கின்றது. மக்களின் கருத்துக்களைக் கேட்காமல் கொண்டு வரப்படும் இந்த அரசியலமைப்பு இன, மத நிலையை மாற்ற முயற்சிக்குமா என்பது சந்தேகமே.

ஐ.எம்.எப் கடன் தவணை அடுத்த வாரம் நிறைவேற்றப்படாது. ஆனால் அதன் பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கை வர உள்ளது என்று குறிப்பிட்டார்.

மேலும், அரசாங்கம் நாடு மீண்டும் திவாலாகும் வாய்ப்பைப் பொருட்படுத்தாமல் தேர்தல் வெற்றிக்கான முடிவுகளையே எடுத்துள்ளனர்.

அதனால்தான் வரவு – செலவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தாமல் தேர்தல் நடத்தப்படுவதோடு, அவர்கள் தங்கள் எதிர்கால நிகழ்ச்சி நிரலில் வரவு – செலவுத் திட்டத்தை முன்மொழிந்திருந்தால், சர்வதேச நாணய நிதியம் குறித்த நிகழ்ச்சி நிரலைப் பார்த்து முடிவுகளை எடுத்திருக்கும் என்றும் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...