நபர் ஒருவரை கொடூரமாக கொலை செய்துவிட்டு காரை திருடிய கும்பல்

17 23

நபர் ஒருவரை கொடூரமாக கொலை செய்துவிட்டு காரை திருடிய கும்பல்

கேகாலை, கொஸ்ஸின்ன பகுதியில் நேற்று காலை ஒருவர் கொலை செய்யப்பட்டு கார் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரின் கைகளையும் கால்களையும் கட்டி வாயில் ப்லாஸ்டர் ஒட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் 75 வயதான நபரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின் போது, கொலை செய்யப்பட்டவரின் மனைவியும் வீட்டில் இருந்ததாகவும், அவர் மீதும் சந்தேகநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தாக்குதலில் படுகாயமடைந்த அவர் கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

சந்தேகநபர்களால் திருடப்பட்ட கார் பின்தெனிய பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version