24 664eac611df61
இலங்கைசெய்திகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தடுப்பூசி செலுத்திய நபர் மரணம்

Share

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தடுப்பூசி செலுத்திய நபர் மரணம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் தடுப்பூசி செலுத்திய பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 17வது அறையில் தீக்காயங்களுக்குள்ளாகிய நோயாளி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவருக்கு Cefuroxime என்ற தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தடுப்பூசி போடப்பட்ட நிலையில் அந்த நபர் உயிரிழந்ததாகவும் அவர் 31 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குமார விக்கிரமசிங்கவிடம் வினவிய போது, குறித்த நபரின் மரணம் தொடர்பில் ஏற்கனவே விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நோய் எதிர்ப்பு தடுப்பூசியை செலுத்தியதால் மரணம் நிகழ்ந்ததா அல்லது வேறு காரணம் உள்ளதா என்பதை கண்டறிய முடியும் என மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், உயிரிழந்த நோயாளிக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் ஊசிகள் ஏற்கனவே பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் குமார விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...