யாழ். மானிப்பாயில் வாள்களுடன் கைதான நபர்!

23 649557ffe6765

யாழ்ப்பாணம் மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இரண்டு வாள்களுடன் 40 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கையானது மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு பகுதியில் நேற்று (22) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் இரண்டு வாள்களை எடுத்துச் சென்றபோது வீதியில் வைத்து, மானிப்பாய் காவல்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version