கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ரிவேரா கப்பல்

tamilni 245

மாலைதீவில் இருந்து ரிவேரா சொகுசு பயணிகள் கப்பலானது கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

குறித்த சொகுசுக் கப்பல் (15.01.2024) அதிகாலை 1,090 பயணிகள் மற்றும் 790 பணியாளர்களுடன் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க, கனேடிய மற்றும் இந்திய சுற்றுலாப் பயணிகளுடன் மர்ஷல் தீவுகளின் கொடியுடன் வருகை தந்த ரிவேரா என்ற சொகுசுக் கப்பலில் வந்த சுற்றுலாப் பயணிகள் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், ரிவேரா சொகுசு பயணிகள் கப்பல் நாளைய தினம், ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கும் அதன்பின்னர் தாய்லாந்தின் புக்கெட் துறைமுகத்துக்கும் பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version