இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பைப் பிரதிபலிக்கும் வகையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக மாலைதீவினால் 25,000 டின்மீன் (Canned Fish) பெட்டிகள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
மொத்தம் 14 கொள்கலன்களில் (Containers) அடைக்கப்பட்டிருந்த இந்த டின்மீன் தொகை, இன்று (டிசம்பர் 5) பிற்பகல், மாலைதீவு உயர் ஸ்தானிகரால் இலங்கை அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான உணவுப் பொருட்களை வழங்குவது உள்ளிட்ட அரசாங்கத்தின் நிவாரண வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் மாலைதீவு அரசாங்கம் இந்த நன்கொடையை வழங்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு இந்த உணவுப் பொருட்களை உடனடியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

