மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு இன்று 48-வது பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்களும், சொத்து விபரங்களும்!

actor vijay sethupathi helped a girl for she return tamil nadu

மக்கள் செல்வன் என ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய் சேதுபதி. தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் கலக்கிக்கொண்டிருக்கும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராகவும் பட்டையை கிளப்பி வருகிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த தலைவன் தலைவி படம் மாபெரும் வெற்றிபெற்றது. மேலும் Train, Slum Dog, காந்தி டாக்கீஸ், அரசன் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இன்று நடிகர் விஜய் சேதுபதியின் 48வது பிறந்தநாள். ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 140 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 20 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.

 

 

Exit mobile version