அர்ச்சுனாவை எதிர்க்கட்சித் தலைவராக்குங்கள் :விமல் வீரவன்ச அறிவிப்பு

6

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனை எதிர்க்கட்சித் தலைவராக்குமாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேற்றிரவு (29) நடத்திய அரசியல் நிகழ்ச்சியின் போது, ஓரினசேர்க்கையாளர்களை இலங்கையின் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு ஈர்ப்பது தொடர்பில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் பொது பிரச்சினையை பேசுபவர் எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருக்கிறார் என்று பார்க்க வேண்டிய அவசியமில்லை.

எனவே நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் எல்லாவித பொது பிரச்சனையையும் பேசுவதால் அவரை எதிர்க்கட்சித் தலைவராக்குங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போது நாட்டின் எதிர்க்கட்சித்தலைவராக சஜித் பிரேமதாச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version