tamilni 171 scaled
இலங்கைசெய்திகள்

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் முக்கிய தீர்மானம்

Share

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் முக்கிய தீர்மானம்

மாற்றுத்திறனாளிகளுக்கு இம்மாதம் முதல் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தீர்மானித்துள்ளார்.

எலும்பு, தசை, நரம்பு பிரச்சினைகள் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனம் செலுத்த முடியுமானால் பரிந்துரையின் பேரில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தில் உள்ள தடைகளை நீக்குமாறு கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தலைமையிலான குழு வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு சாதாரண சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவது இந்த நாட்டில் இதுவே முதல் தடவை என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் அவர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...

28 7
உலகம்செய்திகள்

ஈரான் போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் ஜோ கென்ட் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான போரில்...

27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

26 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷ ஒளடதங்களை அழிப்பதற்கான சட்டத் திருத்தம்: புதிய நடைமுறைகளை வகுக்க குழு நியமனம்

விஷ ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்பாடுகளில் காணப்படும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக,...