தற்கொலைத் தாக்குதல் சம்பவம் ஒன்று தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(28) வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.
கடந்த 2008ஆம் ஆண்டு பொரலஸ்கமுவை பிரதேசத்தில் அப்போதைய அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை இலக்கு வைத்து தற்கொலைத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் குறித்த வழக்கின் சாட்சிகளில் ஒருவராக மைத்திரிபால சிறிசேனவும் பெயரிடப்பட்டிருந்தார்.
இரண்டு சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட மா அதிபரினால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றைய தினம் குறித்த வழக்கு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.