மகிந்தவை ஒரு வாரத்திற்குள் கொலை செய்வதாக மிரட்டல்

tamilni 383

மகிந்தவை ஒரு வாரத்திற்குள் கொலை செய்வதாக மிரட்டல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒரு வார கால இடைவெளிக்குள் கொலை செய்வதாக மிரட்டிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு 7 விஜயராம மாவட்டத்தில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு எதிரில் நபர் ஒருவர் சத்தமிட்டு குழப்பம் விளைவித்தார் என தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவிற்கு அச்சுறுத்தல் விடுத்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று முற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு வார காலத்திற்குள் அடையாளம் தெரியாத வகையில் படுகொலை செய்வதாக குறித்த நபர் மிரட்டியுள்ளார.

கிரிந்திவெல பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Exit mobile version