இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகளால் மகிந்தவின் உயிருக்கு ஆபத்து : பாதுகாப்பு கோரும் முன்னாள் எம்.பி

Share
33
Share

விடுதலைப் புலிகளால் மகிந்தவின் உயிருக்கு ஆபத்து : பாதுகாப்பு கோரும் முன்னாள் எம்.பி

தமிழீழ விடுதலைப் புலிகளால் மகிந்த ராஜபக்சவிற்கு (Mahinda Rajapaksa) உயிராபத்து இருப்பதால் அவரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க (S. B. Dissanayake) தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இல்லாதொழிக்கப்பட்டாலும் அந்த அமைப்பின் நோக்கம் இன்றும் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் வியாபித்துள்ளதுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் (Colombo) நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, “சந்தையில் நிலவும் அரிசி மற்றும் தேங்காய் தட்டுப்பாட்டுக்கு அரசாங்கம் வெகுவிரைவில் தீர்வு காண வேண்டும். நாட்டு மக்கள் முதலில் உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும்.

மொத்த நுகர்வுக்கு தேவையான அளவில் தேசிய மட்டத்தில் தேங்காய் உற்பத்தி செய்யப்படுவதில்லை. பெரும்பாலான தென்னந்தோப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. தென்னந்தோப்புகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை.

இவ்வாறான பின்னணியில் எவ்வாறு அதிகளவான தெங்கு விளைச்சலை எதிர்பார்க்க முடியும். ஆகவே தேங்காய் தட்டுப்பாட்டுக்கு மனித காரணிகளுடன் பௌதீக காரணிகளும் செல்வாக்கு செலுத்துகின்றன.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் பற்றி தற்போது பேசப்படுகிறது. ஓய்வு பெற்ற ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அரச உத்தியோகபூர்வ இல்லங்கள் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அந்த வீடுகளை அவர்கள் தமது விருப்பத்துக்கு அமைய பெருப்பித்துக் கொள்ள அனுமதி வழங்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ள விஜேராம இல்லத்தை அவர்கள் அரச செலவில் தமது விருப்பத்துக்கு அமைய புதுப்பித்துள்ளார்கள்.

நாடு வங்குரோத்து நிலையடைந்த சந்தர்ப்பத்திலும் அந்த வீட்டை புனரமைப்பதற்கு பல மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. ஆகவே இது முறையற்றதொரு செயற்பாடாகும்.

மகிந்த ராஜபக்ச 30 ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். விடுதலைப்புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டிருந்தாலும் அந்த அமைப்பின் நோக்கம் இன்றும் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் வியாபித்துள்ளது.

கொழும்பு காலி முகத்திடல் போராட்டக்களத்தில் விடுதலைப்புலிகளின் இலக்கு வெளிப்பட்டது. ஆகவே மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்“ என தெரிவித்தார்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...