rtjy 115 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பில் மகிந்தவின் மாநாடு குறித்து சர்ச்சை

Share

கொழும்பில் மகிந்தவின் மாநாடு குறித்து சர்ச்சை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கட்சி மாநாட்டிற்கு வருவதற்கு மக்களுக்கு வவுச்சர் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளதாக முன்னணி சோசலிஸ கட்சி தெரிவித்துள்ளது.

தெமட்டகொட, மாளிகாவத்தை, வனாத்தமுல்லை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு இவ்வாறு வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அடுத்த பாடசாலை தவணை ஆரம்பிக்கும் போது பிள்ளைகளுக்கு புத்தகங்களை பெற்றுக் கொள்வதற்காக வவுச்சர் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கூட்டத்தின் ஆரம்பம் முதல் முடியும் வரை தங்கியிருப்பவர்களுக்கு மாத்திரம் வவுச்சர் வழங்கப்படும் என முன்னணி சோசலிஸ கட்சியின் விளம்பர செயலாளர் புபுது ஜயகொட தெரிவிததுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாரிய மாநாடு நேற்று கொழும்பில் நடைபெற்றது. இதனை கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 8
உலகம்செய்திகள்

இந்தோனேசியாவில் படகு மூழ்கியதில் 38 பேர் மாயம்

இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே 65 பேருடன் சென்ற பயணிகள் படகு மூழ்கியதில் 38 பேர்...

Murder Recovered Recovered Recovered 7
இலங்கைசெய்திகள்

டொலர் ஒன்றின் பெறுமதியில் இன்று பதிவான மாற்றம்

இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி(CBSL) வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று (03) ​​அமெரிக்க...

Murder Recovered Recovered Recovered 6
இலங்கைசெய்திகள்

மேர்வின் சில்வாவுக்கு பிணை

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் மேலும் இரண்டு பேருக்கு, கம்பஹா உயர் நீதிமன்ற நீதிபதி...

Murder Recovered Recovered Recovered 4
உலகம்செய்திகள்

இந்தியா -அமெரிக்கா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம்

இந்தியாவும் அமெரிக்காவும் 10 ஆண்டுகளுக்கான பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புக்கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தம், 2025...