தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மெய்பாதுகாவலர் நெவில் வன்னியாராச்சி, பாதுகாப்புப் படைகளில் மோசடியாக பதவிகளை பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
யோஷித ராஜபக்சவுக்கு சட்டவிரோதமாக கடற்படையில் உயர் பதவிகள் வழங்கப்பட்டதைப் போலவே நெவில் வன்னியாராச்சிக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ராஜபக்ச குடும்பத்துடன் நெருக்கமாக இருந்த பாதுகாப்புப் படைகளில் சிலருக்கு இந்த முறையில் பதவி உயர்வு வழங்கப்பட்ட விதம் புலனாய்வு பத்திரிகையாளர்களின் கவனத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், சட்டவிரோத சொத்து குவிப்பு குற்றச்சாட்டில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட மகிந்த ராஜபகசவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி இம்மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள வருமானத்தை விட அதிக வருமானம் மற்றும் சொத்துக்கள் மற்றும் சொத்துக்களின் உரிமை இருப்பது தெரியவந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் அறிக்கை சமர்பித்த நிலையிலேயே அவருக்கு மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.