இலங்கைசெய்திகள்

மரணமடைந்தாலும் மகிந்தவின் உடல்…அஜித் ராஜபக்ச பகிரங்கமாக கூறிய விடயம்

1 52
Share

மரணமடைந்த பின்னரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) உடல் எதிர்கால சந்ததியினருக்காக பொதுமக்கள் பார்வைக்காக பாதுகாக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச (Ajith Rajapakse) தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதன்போது, 30 ஆண்டுகால உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததமைக்காக மகிந்த ராஜபக்ச நாட்டில் போற்றப்படவேண்டிய நபர் என்றும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.

எனவே, அவரது மறைவுக்குப் பிறகு, மறைந்த சோவியத் தலைவர் விளாடிமிர் லெனின் மற்றும் வியட்நாமிய புரட்சிகரத் தலைவர் ஹோ சி மின் போலவே மகிந்த ராஜபக்சவின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக பாதுகாக்கப்பட வேண்டும் என்று அஜித் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இப்படியான ஒரு தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு பறிக்கப்பட்டு, அவர் நாட்டுக்காக ஆற்றிய பணிகளைப் புறக்கணித்து குறைமதிப்பிற்கு உட்படுத்தி, சாதாரண குடிமகனாக அவரை மாற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறனதொரு பின்னணியில், முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்று முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...