24 10
இலங்கைசெய்திகள்

மீண்டும் அதிரடி காட்டும் மகிந்த

Share

மீண்டும் அதிரடி காட்டும் மகிந்த

தென்னிலங்கை அரசியல் ஏற்பட்ட பாரிய மாற்றம் காரணமாக நிலைகுலைந்துள்ள ராஜபக்சர்கள், நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்துள்ளன.

இந்நிலையில் இலங்கையின் ஒட்டுமொத்த சிங்களவர்களின் ஆதரவை பெற்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்தை மக்கள் நிராகரிக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் அரசியல் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் மகிந்த அறிவித்திருந்தார்.

எனினும் அண்மைக்காலமாக அநுர அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டு விசமர்சனங்களின் பின்னணியில், மகிந்த தன் முடிவை மாற்றியுள்ளதுடன், அரசியல் ஓய்வையும் நிராகரித்துள்ளார்.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வெற்றிக்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் இலகுவான வெற்றியை பெற முடியும் என்ற நம்பிக்கையை மகிந்த நேற்று வெளியிட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக தற்காலிய ஓய்வில் உள்ள போதும், அரசியல் இருந்து ஒருபோதும் விலகப் போவதில்லை என மகிந்த குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் சிரேஷ்ட அரசியல்வாதிகளை தேர்தலில் போட்டியிடாதவாறு விரட்டப்பட்டுள்ளதாகவும், அது தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த வெற்றி எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜனாதிபதியின் இந்த கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், ராஜபக்சர்கள் மீண்டும் அரசியலில் பிரகாசிப்பர் என்றும் மகிந்த சூளுரைத்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...