மகிந்தவின் வீட்டிற்கு 220 கிலோவோட் ஜெனரேட்டர்

tamilni 253

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வீட்டிற்காக 50 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான மின் உற்பத்தி இயந்திரம் (ஜெனரேட்டர்) மின்சார சபையிடமிருந்து பெறப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கு புதிய வற் வரி சேர்க்கப்படவில்லை என சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.

இந்த மின் உற்பத்தி இயந்திரத்தை அந்த வீட்டிற்கு வழங்குமாறு ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐம்பது மில்லியனுக்கும் குறைவான மதிப்பீட்டில் அது கொடுக்கப்பட்டுள்ளதாகவும், மின்சார சபையின் சில முதுகெலும்பில்லாத அதிகாரிகள் அதனை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், இந்த இயந்திரம் 220 கிலோவோட் திறன் கொண்டதாகவும், பழைய வற் 15 சதவீதம் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version