27 11
இலங்கைசெய்திகள்

மகிந்த – கோட்டாபய சகாக்களுடன் அநுர தரப்பு பேச்சுவார்த்தை

Share

மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருடன் ஒன்றிணைந்து செயற்பட்டவர்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டவர்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் சாடியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி தரப்பினர் ஊழல்வாதிகளை சலவை செய்தா கட்சியில் இணைத்துக் கொள்கிறார்கள்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (21) நடைபெற்ற நிதி சட்ட கட்டளைகள் மற்றும் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பெருமளவிலான ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

எமது கட்சிக்கு ஆதரவளித்த அனைவருக்கும் இந்த உயரிய சபை ஊடாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆட்சியமைப்பது தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்.

ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியை போன்று பேசுகிறது. கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பது தொடர்பில் அரசாங்கம் பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது.

தேர்தலுக்கு முன்னர் ஊழல்வாதிகளை இணைத்துக் கொள்ள போவதில்லை என்ற தரப்பினர் தற்போது பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்கள்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெறுபேறுகள் குளறுபடியானதாக காணப்படுகிறது.

இதற்கு தேர்தல் முறைமை பிரதான காரணமாகும். இந்த சிக்கலுக்கு தீர்வு கண்டதன் பின்னர் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்திய போதும் அரசாங்கம் அதனை கவனத்திற்கொள்ளவில்லை” என்றார்.

Share
தொடர்புடையது
31 8
இலங்கைசெய்திகள்

மீண்டும் பேருந்துகளில் இருந்து நீக்கப்படவுள்ள அலங்கார பொருட்கள்..!

வீதி விபத்துகளைக் குறைத்து, நெறிப்படுத்தப்பட்ட போக்குவரத்து முறையை நிறுவும் நோக்கில் ஜூலை 1ஆம் திகதி முதல்...

32 8
இலங்கைசெய்திகள்

இலங்கையில் புதிய கோவிட் திரிபு பரவுமா..! சுகாதார அமைச்சு விளக்கம்

இலங்கையில் புதிய கோவிட் – 19 திரிபு பரவும் அபாயம் இல்லை என சுகாதார மற்றும்...

30 8
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த மனைவி நடந்தது என்ன…! தவிக்கும் கணவன்

சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிவிட்டு இலங்கைக்கு திரும்பிய பெண் ஒருவர் காணாமல் போயுள்ளமை குறித்து...

29 9
இலங்கைசெய்திகள்

ஒரே சிறை அறையில் அடைக்கப்பட்ட தந்தையும் மகனும்

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித ரம்புக்வெல்லவும் கொழும்பு சிறைச்சாலையின் M2...