பதவி விலகும் மகிந்த அமரவீர: மைத்திரியுடன் புதிய கூட்டணி

tamilnih 106

பதவி விலகும் மகிந்த அமரவீர: மைத்திரியுடன் புதிய கூட்டணி

ஐக்கிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து மகிந்த அமரவீர மற்றும் திலங்க சுமதிபால ஆகியோர் பதவி விலக தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அதன்படி அவர்கள் இன்று (30.01.2024) தமது பதவிகளை விட்டு அவர்கள் வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுஜன ஐக்கிய பெரமுனவின் செயற்குழு கூட்டம் நேற்று (29) பிற்பகல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

அக்கட்சியின் சின்னமாக நாற்காலி சின்னத்தை கொண்டு பரந்த கூட்டணியை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி அரசியலமைப்பில் திருத்தம் செய்து புதிய அதிகாரிகள் சபையை நியமிக்க தீர்மானிக்கப்பட்டதாக மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இங்கு 03 முன்மொழிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

இது தொடர்பான கலந்துரையாடலின் பின்னர் கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

“ஐக்கிய முன்னணி என ஒரு பரந்த அமைப்பு உருவாக்கப்படுகிறது. இதில் இணையுமாறு பல அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதன்படி அரசியலமைப்பானது திருத்தம் செய்யப்பட்டு ஒரு வாரத்தின் பின்னர் பொதுஜன ஐக்கிய பெரமுன புதிய நிர்வாகிகள் சபையை நியமிக்கும் என நம்புகிறோம்.

இதற்கமைய மகிந்த அமரவீரவும் திலங்க சுமதிபாலவும் எமது கட்சியில் இணைய தீர்மானித்துள்ளனர்.” என்றார்.

Exit mobile version