மதிவதனி – துவாரகா உயிருடன் – பாதுகாப்பு அமைச்சு பதில்

மதிவதனி - துவாரகா உயிருடன் - பாதுகாப்பு அமைச்சு பதில்

மதிவதனி - துவாரகா உயிருடன் - பாதுகாப்பு அமைச்சு பதில்

மதிவதனி – துவாரகா உயிருடன் – பாதுகாப்பு அமைச்சு பதில்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் துணைவியாரான மதிவதனி மற்றும் புதல்வி துவாரகா ஆகியோர் உயிருடன் உள்ளனர் என வெளியிடப்பட்டுள்ள செய்தி நகைப்புக்குரியது என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கேணல் நலின் ஹேரத் தெரிவித்துள்ளார்.

மதிவதனி மற்றும் மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் இருப்பதாகவும், மிக அண்மையில் இருவரையும் சந்தித்ததாகவும், அவர்களுடன் உணவு உண்டதாகவும் டென்மார்க்கில் வசிக்கும் மதிவதனியின் சகோதரி காணொளி ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நலின் ஹேரத், தனது கவனத்தை ஈர்த்துக்கொள்ளும் வகையில் இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதுவொரு போலியான நாடகம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவரையும் தான் நேரடியாக சந்தித்தாக மதிவதனியின் சகோதரி கூறிய கருத்து தமிழ் சமூக வலைத்தள பரப்பில் எதிர்வினைகளையும் பரபரப்பையும் தொடர்ந்தும் உருவாக்கி வருகிறது.

டென்மார்க்கில் வசிக்கும் இவர், ஒரு காணொளிப் பதிவின் ஊடாக இந்தக் கருத்தை வெளிப்படுத்திய நிலையில் இந்தக் காணொளியை மையப்படுத்திய கலவையான எதிர்வினைகள் வெளிப்பட்டுள்ளன.

தனது சகோதரி மதிவதனி மற்றும் பெறாமகள் துவாரகா ஆகியோரை தான் நேரடியாக சந்தித்தாக இவர் கூறியிருந்தாலும், இந்தச் சந்திப்பு எங்கு இடம்பெற்றது என்ற விடயத்தை இந்தக் காணொளியில் அவர் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்து.

Exit mobile version