மதிவதனி – துவாரகா விடயத்தில் தயக்கம் காட்டும் இலங்கை இராணுவம்
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் துணைவியாரான மதிவதனி மற்றும் புதல்வி துவாரகா ஆகியோர் இறுதி யுத்ததில் உயிரிழந்தார்களாக என்பதை வெளிப்படுத்த இலங்கை இராணுவம் தயக்கம் காட்டியுள்ளது.
2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் குறித்த இருவர் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு எதுவோ அதுவே இராணுவத்தின் நிலைப்பாடு என இராணு பேச்காளர் பிரிஹேடியர் ரவி ஹேரத் எமது ஊடக பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளார் என உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழநெடுமாறன் அண்மையில் கூறியிருந்தார்.
இவ்வாறான சூழலில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் துணைவியாரான மதிவதனி மற்றும் புதல்வி துவாரகாவை தான் நேரடியாக சந்தித்தாக மதிவதனியின் சகோதரி கூறிய கருத்து தமிழ் சமூகவலைத்தளத்தில் பரவி வருகின்றது.
டென்மார்க்கில் வசிக்கும் இவர், ஒரு காணொளிப்பதிவின் ஊடாக இந்தக்கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா இராணு பேச்சாளர் பிரிஹேடியர் ரவி ஹேரத்தை தொடர்பு கொண்டு எமது செய்தி பிரிவு வினவிய போது, அவர்கள் இறுதிக யுத்ததில் உயிரிழந்தார்களாக என்பதை வெளிப்படையாக கூற தயங்கியுள்ளார்.
இந்த தகவல்களின் பின்னணியில் சர்வதேச நிகழ்ச்சி உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த இராணுவ பேச்சாளர் அதனை உறுதிப்படுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் துணைவி மற்றும் புதல்வி குறித்த செய்தி நகைப்புக்குரியது என ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் |கேணல் நலின் ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுவொரு நாடகம் எனவும் அவர் கூறியுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் துணைவியாரான மதிவதனி மற்றும் புதல்வி துவாரகா ஆகியோர் உயிருடன் உள்ளனர் என வெளியிடப்பட்டுள்ள செய்தி நகைப்புக்குரியது என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கேணல் நலின் ஹேரத் தெரிவித்துள்ளார்.
மதிவதனி மற்றும் மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் இருப்பதாகவும், மிக அண்மையில் இருவரையும் சந்தித்ததாகவும், அவர்களுடன் உணவு உண்டதாகவும் டென்மார்க்கில் வசிக்கும் மதிவதனியின் சகோதரி காணொளி ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நலின் ஹேரத், தனது கவனத்தை ஈர்த்துக்கொள்ளும் வகையில் இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதுவொரு போலியான நாடகம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் இருவரையும் தான் நேரடியாக சந்தித்தாக மதிவதனியின் சகோதரி கூறிய கருத்து தமிழ் சமூக வலைத்தள பரப்பில் எதிர்வினைகளையும் பரபரப்பையும் தொடர்ந்தும் உருவாக்கி வருகிறது.
டென்மார்க்கில் வசிக்கும் இவர், ஒரு காணொளிப் பதிவின் ஊடாக இந்தக் கருத்தை வெளிப்படுத்திய நிலையில் இந்தக் காணொளியை மையப்படுத்திய கலவையான எதிர்வினைகள் வெளிப்பட்டுள்ளன.
மதிவதனி மற்றும் துவாரகா ஆகியோரை தான் நேரடியாக சந்தித்தாக அவருடைய சகோதரி வெளியிட்ட காணொளி பின்வருமாறு..
2 Comments