சுமந்திரன் மேற்கொண்டுள்ள நடவடிக்கை

tamilni 137

சுமந்திரன் மேற்கொண்டுள்ள நடவடிக்கை

மட்டக்களப்பு – மாதவனை, மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரைவழக்கு தொடர்பில் கொழும்பு உச்ச நீதிமன்றத்தில் மேலதிக நடவடிக்கைகளை சுமந்திரன் மேற்கொண்டுவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கு தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை M.A சுமந்திரன் ஊடாக நேற்று(11.10.2023) சாட்சியங்களை சமர்ப்பித்துள்ளார் என சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் போது சாணக்கியன் , கோ.கருணாகரம், சுமந்திரன் போன்றவர்களால் 2022 ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நேற்றைய தினம் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் சாணாக்கியன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நீதி கோரி 27 தினங்களாக பண்ணையாளர்கள் வீதியில் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நீதிமன்ற கட்டளை இருந்தும் அத்துமீறிய பெரும்பான்மை இனத்தவர்களின் நில அபகரிப்பு இன்றும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றமை கவலையளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

Exit mobile version