மாவீரர்களுக்கு திருகோணமலையில் நினைவஞ்சலி

rtjy 248

மாவீரர்களுக்கு திருகோணமலையில் நினைவஞ்சலி

தாயகத்தின் உரிமைப் போரில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இன்று (27) தாயகம் முழுவதும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் திருகோணமலையிலிருந்து வருகை தந்தவர்களை பொலிஸார் சம்பூர் ஆலங்குளத்திலுள்ள துயிலும் இல்லத்திற்கு செல்ல விடாமல் தடுத்த போதிலும் கட்டை பறிச்சான் பாலத்திற்கு அருகில் மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது இலங்கை தமிழரசு கட்சியின் பொருளாளர் வெள்ளதம்பி சுரேஷ் மக்களுடன் இணைந்து உயிரிழந்த உறவுகளுக்காக மலர் மாலை அணிவித்து தீபமேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version