25 67b4e515720bd
இலங்கைஅரசியல்செய்திகள்

இனவாத அழுத்தங்களுக்குக் கோழைத்தனமாக அடிபணிந்தது அரசாங்கம் – அருண் ஹேமச்சந்திரா பதவி விலக வேண்டும்! – எம்.ஏ.சுமந்திரன் ஆவேசம்

Share

திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை அகற்றும் விவகாரத்தில் அரசாங்கம் பின்வாங்கியதைக் கண்டித்து, இலங்கைத் தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் அவர்கள், அமைச்சர் ஆனந்த விஜயபால மற்றும் தே.ம.சக்தி அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார். அருண் ஹேமச்சந்திரா உட்பட அனைத்து தமிழ் உறுப்பினர்களும் உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அவரது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

“அமைச்சர் ஆனந்த விஜயபாலவும் தே. ம. சக்தி அரசும் பேரினவாத சக்திகளின் அழுத்தங்களுக்குக் கோழைத்தனமாக அடிபணிவதை இலங்கைத் தமிழரசு கட்சி கேவலமாகக் காண்கிறது.”

“நேற்றிரவு [நவ 17] அமைச்சரின் கட்டளைப்படி திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சிலை பொலிஸாரினால் அகற்றப்பட்ட போது, அரசாங்கம் இனவாத எண்ணமில்லாமல் சரியாக நடந்து கொள்கிறது என்று சிலர் நினைத்தார்கள்.”

“ஆனால் அப்படியல்ல என்பதை சில மணி நேரத்துக்குள்ளேயே அமைச்சர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். பாதுகாப்புக்காகவே சிலை அகற்றப்பட்டதாகவும் அது இன்று மீள நிறுவப்படும் என்றும் வெட்கமில்லாமல் அறிவித்த போதே சகல மக்களும் சமத்துவமாக நடத்தப்படுவார்கள் என்ற வாக்குறுதி காற்றில் பறக்க விடப்பட்டது.”

“தே. ம. சக்தி அரசும் முன்னைய அரசுகளைப் போலவே ஒரு இனவாத, சிங்கள பெளத்த பேரினவாத அரசு என்பதை நிறுவியுள்ளது. இக் கட்சியைச் சேர்ந்த அனைத்து தமிழ் உறுப்பினர்களும், திருகோணமலை உறப்பினர் அருண் ஹேமச்சந்திரா உட்பட, உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...