2 24
இலங்கைசெய்திகள்

தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள சிவாஜிலிங்கம்

Share

தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள சிவாஜிலிங்கம்

அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து எமது சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கையை அரசாங்கத்திற்கு முன்வைக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் (M.K. Shivajilingam) தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கம் தனது ஆட்சியிலே இடம்பெறுவதாக குறிப்பிட்ட எந்த விடயங்களும் தற்போது முன்னெடுக்கப்படவில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்று (21) நடத்திய ஊடக சந்திப்பிலே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ”13ஆம் திருத்த சட்டத்தின் கீழ் தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இந்தியா (India) செயற்பட்டு வருகின்ற போதிலும் எமது புதிய அரசாங்கம் அதில் பெருமளவு கரிசனை காட்டவில்லை.

ஜனாதிபதி அநுர (Anura) இந்தியாவிற்கு சென்று பிரதமருடன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். தமிழ் தரப்பினுடைய கோரிக்கையாக இருந்து வருவது சமஸ்டி கோரிக்கையாகும்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் (Indo-Sri Lanka Accord) ஊடாக கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமை அரசியல் அமைப்பில் இருந்தும் கூட அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

தற்போது இந்தியாவை சந்தித்த ஜனாதிபதி கூட அரசியல் உரிமை தொடரில் எந்த விதமான திட்டவட்டமான உறுதிமொழிகளையும் வழங்கவில்லை.

அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்திருக்கிறார். புதிய அரசியல் அமைப்பு கொண்டு வரப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

அரசியலமைப்பு என்பது பழைய மொந்தையிலேயே புதிய கள்ளு போன்று இருக்குமே தவிர எவ்வித தீர்வும் கொண்டதாக இருக்கப்போவதில்லை.

முதல் தடவையாக இனவாதத்தைக் கொண்டிருக்க கூடிய ஒரு அரசு பதவி ஏற்றிருக்கிறது. இவ்வாறு மிகப்பெரும் வெற்றி பெற்றும் கூட அவர்களது சிந்தனையில் பாரிய மாற்றம் இல்லை. ஒற்றை ஆட்சியை வைத்துக்கொண்டு தான் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல செயற்பட்டு வருகிறார்கள்.

அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து எமது சுயநிர்ணய உரிமையை முன்வைப்பதற்கான கோரிக்கையை அரசாங்கத்திற்கு முன்வைக்க வேண்டும் பல உயிர் தியாகங்களை செய்த பின்பும் நாம் பிரிந்து செயற்பட முடியாது.

எனவே அனைவரையும் ஒன்றுபடுமாறு அழைப்பு விடுக்கின்றோம். இதற்கு புலம்பெயர்ந்தவர்களும் ஈழத்தில் இருக்கக்கூடிய அத்தனை தமிழ்த் தேசிய அணியினரும் ஒன்றுபட வேண்டும்.

2013 ஆம் ஆண்டு சட்டசபையில் ஜெயலலிதா தமிழ்நாடு கோரிக்கையை முன்வைத்து அதனை உறுதியுடன் செயற்படுத்தி இருந்தார். அதே கோரிக்கையோடு தான் தற்போது விஜய்யினுடைய கட்சியும் முன்னோக்கி செல்கிறது.

அதேபோன்று தாயகத்திலும் புலம்பெயர்ந்த தமிழர்களும் ஒரே கோரிக்கையுடன் பயணிப்போமாக இருந்தால் அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

இலங்கைத் தமிழரசுக்கட்சி (ITAK) 75 ஆண்டுகளை தாண்டியும் தற்போதும் தலைமைத்துவம் இல்லாத நிலையில் இலங்கை நீதிமன்றத்தை நாடுகின்ற நிலைமையே காணப்படுகிறது.

எனவே அவர்கள் சமஸ்டியை கைவிட்டு ஒரு கூட்டு சமஸ்டி ஊடாக அனைவரையும் உள்வாங்கி முன்னோக்கி பயணிக்க வேண்டும்“ என சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
qWa3tdNG
செய்திகள்உலகம்

ரேபிஸ் பரவுவதைத் தடுக்க ஜகார்த்தாவில் நாய், பூனை, வௌவால் இறைச்சிக்குத் தடை!

இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் ரேபிஸ் (Rabies) நோய் பரவுவதைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, நாய்,...

images 4 2
செய்திகள்உலகம்

எச்1பி விசா திட்டத்தில் பெருமளவு மோசடி;அமெரிக்கப் பொருளாதார நிபுணர் அதிர்ச்சித் தகவல்!

அமெரிக்காவின் பிரபலப் பொருளாதார நிபுணர் டேவ் பிராட் (Dave Brat), எச்1பி (H-1B) விசா திட்டத்தில்...

da00bfe0 1dd0 11ef 95bd a16a3f175cc2.jpg
செய்திகள்இலங்கை

பெங்களூரில் இணையவழிப் பாலியல் மிரட்டல்: இலங்கை மாணவரிடம் பணம் பறித்த இன்ஸ்டாகிராம் கும்பல்!

பெங்களூரில் கல்வி கற்கும் 24 வயதுடைய இலங்கை மாணவர் ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான நபரால்...

கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளது
செய்திகள்அரசியல்இலங்கை

வாழைச்சேனை சம்பவங்கள் பௌத்த-சிங்கள சமூகத்தைத் தூண்டும் சதி: ஞானசார தேரர் எச்சரிக்கை!

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் மற்றும் வாழைச்சேனையில் தொல்பொருள் பெயர் பலகைகள் அகற்றப்பட்டமை போன்ற சம்பவங்கள்...