தமிழகத்தில் மட்டுமே துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் இத்தனை கோடி வசூலா?… தாறுமாறு வசூல் வேட்டை

IMG 20241128 WA0024

வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி நடிப்பில் வெளியான திரைப்படம் லக்கி பாஸ்கர்.

முதலில் செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட பின் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக வெளியானது.

அன்று மட்டுமே சிவகார்த்திகேயனின் அமரன், ஜெயம் ரவியின் பிரதர் மற்றும் கவினின் ப்ளடி பெக்கர் என 3 படங்கள் ரிலீஸ் ஆனது.

இதனால் எந்த படம் எப்படி வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்க அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் மட்டுமே வசூலில் செம மாஸ் காட்டியது.

தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரா என வெளியான இப்படம் ரூ. 70 கோடி பட்ஜெட்டில் தயாராக ரூ. 107 கோடி வரை வசூல் வேட்டை செய்துள்ளது.

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் பெரிய தொகை கொடுத்து படத்தை வாங்கியுள்ளது.

இப்படம் தமிழகத்தில் ரூ. 7 கோடி வரை ஷேர் பெற்றிருப்பதாகவும், இங்கேயே ரூ. 15 கோடி வரை வசூல் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Exit mobile version