13 20
இலங்கைசெய்திகள்

யாழ். வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்ததினம்

Share

யாழ். வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்ததினம்

யாழில் (Jaffna) தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் (Velupillai Prabhakaran) 70 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் உள்ள அவருடைய இல்லத்தில் இன்று (26) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவிஜிலிங்கம் (M.K Shivajilingam) மற்றும் அப்பிரதேச மக்கள் ஒன்று திரண்டு பிரபாகரனுக்கு கேக் வெட்டியும், இனிப்பு மற்றும் மரக் கண்றுகள் வழங்கியும் பிறந்த தினத்தைக் கொண்டாடினர்.

பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக தலைவர் வே.பிரபாகரனின் புகைப்படத்தினை கொண்ட பதாகை ஒன்றும் அச்சிடப்பட்டு அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இதன்போது அங்கு வந்திருந்த வல்வெட்டித்துறை காவல்துறையினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருடைய புகைப்படத்தினை பயன்படுத்த முடியாது என்றும், அதற்கு சட்டத்தில் இடமில்லை என்று தெரிவித்திருந்தனர்.

இருப்பினும் அந்த புகைப்படத்தினை நீக்கிவிட்டு உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்விவுகளை நடத்துங்கள் என்று பொது மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்தநிலையில் அந்தக் கோரிக்கையினை ஏற்ற மக்கள் தலைவர் பிரபாகரனின் படத்தினை அகற்றிவிட்டு சிறப்பான முறையில் பிறந்த தின நிகழ்வினை நடத்தினர்.

மேலும் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70 ஆவது பிறந்த தினத்தை பிரதிபலிக்கும் வகையில் அவருடைய வீட்டு வளாகத்திற்குள் சிறுவர்கள் மற்றும் பொது மக்களால் 70 மரங்கள் நடப்பட்டன.

இதுமட்டுமல்லாமல் 70 மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் மற்றும் 70 தென்னை மரக் கன்றுகள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...