அரச ஊழியர்களிடம் ஆதரவு கோரும் ரணில்

22

அரச ஊழியர்களிடம் ஆதரவு கோரும் ரணில்

பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டு மக்களை வாழ வைப்பதில் அஸ்வெசும மற்றும் உறுமய வேலைத் திட்டங்கள் பெரும் பங்காற்றுவதாகவும், நிவாரணம் கிடைக்க வேண்டிய அனைவருக்கும் துரிதமாக நிவாரணம் வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அஸ்வெசும மற்றும் உறுமய திட்டங்களை முறையாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு அரச அதிகாரிகளின் ஆதரவு தேவை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மாத்தளை, வில்கமுவ பிரதேச செயலகத்தில் நேற்று (29) நடைபெற்ற அஸ்வெசும வேலைத் திட்ட நடைமுறை தொடர்பில் ஆராயும் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் வேலைத் திட்டத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவளிப்பதாக வில்கமுவ கிராம அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி முன்னிலையில் அறிவித்தமையும் விசேட அம்சமாகும்.

Exit mobile version