அரச நிவாரண வழங்கல் உண்மையில் தகுதியானவர்களுக்கு கிடைக்கப் பெறுகிறதா என்பது சந்தேகத்துக்குரியது என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணங்கள் தகுதியானவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெளிவாக அறிவுறுத்தியுள்ளது.
அரச நிவாரண வழங்கல் உண்மையில் தகுதியானவர்களுக்கு கிடைக்கப் பெறுகிறதா என்பது சந்தேகத்துக்குரியது.
அஸ்வெசும நிவாரண திட்டத்தில் நீரழிவு நோயாளர்கள், விசேட தேவையுடையவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். செல்வந்த தரப்பினர் நிவாரண திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளர்கள். ஆகவே இந்த செயற்திட்டம் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
சமூக கட்டமைப்பில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு முறையாக நிவாரணம் வழங்காவிட்டால் ஏழ்மை நிலை தீவிரமடையும். ஆகவே அஸ்வெசும செயற்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை திருத்திக் கொள்ளுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோம் என குறிப்பிட்டார்.
Leave a comment