15 17
இலங்கைசெய்திகள்

இலங்கையில் வெளியிடப்பட்ட உலகிலேயே மிக நீளமான முத்திரை

Share

இலங்கையில் வெளியிடப்பட்ட உலகிலேயே மிக நீளமான முத்திரை

கண்டி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலதா மாளிகை பெரஹராவை குறிக்கும் வகையில் தபால் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட உலகில் மிக நீளமான நினைவு முத்திரை நேற்று(20) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்(Ranil Wickremesinghe) கையளிக்கப்பட்டது.

இந்த முத்திரை 205 மில்லிமீட்டர் நீளமானது என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தலதா மாளிகையின் பெரஹெராவை மதம் சார்ந்த ஆசியாவின் உயர் நிகழ்வாக உலகின் முன்பாக அடையாளப்படுத்துவதற்கான அரச அனுசரணையை வழங்குவதாக உறுதியளித்தார்.

மேலும், பெரஹெராவை ஏற்பாடுச் செய்தமைக்காக சகலருக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி, அதனை தேசிய கலாசார நிகழ்வாக மாத்திரமின்றி, இலங்கையின் தனித்துவமான கலாசார அம்சமாக உலகுக்குக் கொண்டு செல்வதோடு, அதனைப் பாதுகாத்து முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டியதும் அவசியமாகும் என்றும் குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...