வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், உப தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்து ஆசி பெற்றுள்ளனர்.
குறித்த சந்திப்பானது நேற்று(24) மாலை மன்னார் ஆயர் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன் போது மன்னார் மாவட்டத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.