உள்ளூராட்சி தேர்தல்! – பிரதமரை சந்திக்கிறது ஆணைக்குழு

election

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இந்த வாரத்தில் பிரதமருடன் கலந்துரையாட முடியும் என நம்புவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

தேர்தலை நடத்துவதற்கு பணம் பெறப்படும் விதம், தேர்தலில் போட்டியிடும் அரச அதிகாரிகளின் பிரச்சினைகள் போன்றவற்றை பிரதமருடன் கலந்துரையாடவுள்ளதாக தலைவர் மேலும் தெரிவித்தார்.

பிரதமருடனான கலந்துரையாடலில் எடுக்கப்படும் முடிவுகள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் தொடர்பாக இறுதி உடன்பாடு ஏற்பட்ட பின்னர், தேர்தல் தொடர்பாக ஆணையம் இறுதி முடிவு எடுக்கும்.

மேலும், தேர்தலுக்கு பணம் வழங்கியது தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் தமக்கு கிடைக்கவில்லை எனவும் தலைவர் மேலும் தெரிவித்தார்.

அச்சடிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகளை அரசு அச்சகத்தில் வைக்க முடியாது என்றும், அது தவறு என்றும், இருப்புக்களை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தலைவர் தெரிவித்தார்.

இதேவேளை, தேர்தல் ஆணையம் நாளை கூடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version