5 9
இலங்கைசெய்திகள்

வடக்கில் தேசிய மக்கள் சக்தி பெற்றது வரலாற்று ரீதியிலான வெற்றி: பிமல் ரத்நாயக்க

Share

வடக்கு மாகாணத்தில் 150 உறுப்புரிமையை தேசிய மக்கள் சக்தி பெற்றுக் கொண்டமை வரலாற்று ரீதியிலான வெற்றியாகும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று (7) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தி பாரம்பரியமான அரசியல் கட்சிகளை காட்டிலும் ஒப்பீட்டளவில் வெற்றிப்பெற்றுள்ளது. வடக்கு மாகாணத்தில் மாத்திரம் ஆளும் தரப்பு 150 உறுப்புரிமையை பெற்றுக் கொண்டுள்ளது.

மன்னார், வவுனியா , யாழ்ப்பாணம் ஆகிய தேர்தல் மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தி சிறந்த முறையில் வெற்றிப்பெற்றுள்ளது. ஒரு சில பகுதிகளில் பெரும்பான்மை பலத்தை ஆதரவை பெற்றுக் கொண்டுள்ளோம். யாழ். மாவட்டத்தில் 81 உறுப்புரிமை கிடைக்கப் பெற்றுள்ளது.

கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு பிரதேச சபை ஆசனம் கூட கிடைக்கப் பெறவில்லை. ஆகவே வடக்கு மாகாணத்தில் 150 உறுப்புரிமையை பெற்றுக்கொண்டமை வரலாற்று ரீதியிலான வெற்றியாகும்.

வடக்கு மாகாணத்தில் பாரம்பரியமான தமிழ் அரசியல் கட்சிகள் வீழ்ச்சியடைந்துள்ளன. கிழக்கு மாகாணத்தில் பெரும்பாலும் தேசியத்தை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்ட கட்சிகளே உள்ளன. இவ்வாறான நிலையிலும் தேசிய மக்கள் சக்தி அங்கும் வெற்றிப்பெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 68d87cfbd40c4
செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் ஐஸ், கசிப்பு வியாபாரிகள் கைது: 5 கிராம் ஐஸ், 24 போத்தல் கசிப்பு மீட்பு – பெண்கள் வாக்குவாதம்!

மட்டக்களப்பு தலைமையக காவல்துறையின் பிரிவுக்குட்பட்ட கருவப்பங்கேணி மற்றும் திருப்பெருந்துறை பகுதிகளில் போதைப்பொருள் மற்றும் கசிப்பு வியாபாரத்தில்...

image a376c13e7f
செய்திகள்இலங்கை

ஊழல் குற்றச்சாட்டுகள்: புகையிரத திணைக்களத்தின் முன்னாள் பொது முகாமையாளர் உட்பட இரு முன்னாள் உயர் அதிகாரிகள் கைது!

இலங்கையில் இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், இலங்கை புகையிரத திணைக்களத்தின் முன்னாள் பொது...

25 690810a1a0ba8
செய்திகள்இலங்கை

பாடசாலை நேர நீடிப்பு: தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடப்பட்ட பின்னரே முடிவு எடுக்கப்பட்டது – பிரதமர் ஹரிணி அமரசூரிய விளக்கம்!

பாடசாலை நேரத்தை மேலும் அரை மணி நேரம் நீடிக்கும் முடிவானது, தொழிற்சங்கங்கள் உட்படத் தொடர்புடைய அனைத்துத்...

MediaFile 1 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வவுனியா மாணவர் மரணம்: பகிடிவதை குற்றச்சாட்டுக்கு மத்தியில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டன!

வவுனியாப் பல்கலைக்கழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 31) மர்மமான முறையில் உயிரிழந்த முதலாம் ஆண்டு மாணவர்...