எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இலங்கையின் 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ளது.
அதன் மூலம் 28மாநகர சபைகள், 36 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகளுக்கான மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
இந்தத் தேர்தலில் 49 அரசியல் கட்சிகள் மற்றும் 257 சுயேட்சைக்குழுக்களின் மூலம் 75 ஆயிரத்து 589 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
இவர்களில் சுமார் எட்டாயிரம் பேர் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.